ஆ. இராசா con பெரியார் - அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு: Periyar - Ambedkar Indraya Poruthapadu (Tamil Edition)
22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய “பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு” என்ற தலைப்பிலான சிறப்புச்சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் ஆற்றிய உரை.பெருமைமிக்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில் நடைபெறுகின்ற பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பிலான இந்தக்கருத்தரங்கத் தினுடைய தலைவர் பல்கலைக்கழகத்தினுடைய பதிவாளர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களே, வரவேற்புரை நிகழ்த்தியிருக்கின்ற முனைவர் மணிமேகலை அவர்களே, அறிமுகவுரை ஆற்றியிருக்கின்ற வணக்கத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சீரிய சிந்தனையாளர் அய்யா எஸ்.வி.ஆர் அவர்களே, பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களே பெருந்திரளாகக் கலந்துகொண்டிருக் கக்கூடிய பேராசிரியர்களே, எனது அன்புக்குரிய மாணவக் கண்மணிகளே, பத்திரிகையாளர்களே, பெரியோர்களே தாய்மார்களே அனைவருக்கும் வணக்கம்.